பிரேசிலுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு இன்று(04) பிற்பகல் 3.30 மணியளவில் கிரிபத்கொட சந்தியில் இருந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
பிரேசிலுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக பணியாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் உட்பட இரண்டு நாடுகளில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக முறையான விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அச்சமயத்தில் சாட்சியமளிக்க தான் தயாராக இருப்பதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்ததோடு, கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து அமைச்சர் சரத் பொன்சேகா, ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க முனைகின்றார் என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது அமைச்சர் பொன்சேகா அமைப்பாளராக உள்ள களனி தொகுதியில் கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)