அமைச்சர் பைஸரிடம் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு விசேட கடிதம்…

இலங்கை கிரிக்கெட் நிறுவன ஊழல் தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று(02) பொலிஸ் மா அதிபருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் , இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.