தேர்தல் குறித்து அமைச்சரவைக்கு விசேட பிரேரணை..

உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் இன்று(06) நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானம் ஒன்றை கோரியே குறித்த இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நகர சபை கட்டளைகள் சட்டம், உள்ளூராட்சி சபைகள் கட்டளைகள் கட்டம் என்பவற்றின் உறுப்புரைகளில் மாற்றம் கொண்டு வருவதும் இன்றைய அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் பிரேரணையின் நோக்கம் எனவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

 

(rizmira)