அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு..

அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக இன்று(04) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை முன்வைக்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மஹிந்த யாபா அபேயவர்தன  இதனைத் தெரிவித்திருந்தார். அதன்படி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் ஆலோசனையாளர் மங்கள யாபா, பிரதமர் ஆலோசனையாளர் ஆர்.கஸ்த்ரிலிங்கம் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு இன்று முறைப்பாடு அளிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுக அதிகாரசபைக்கு உரித்தான ரூ.330 பில்லியன் இழப்பு தொடர்பிலேயே இவ்வாறு முறைப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.