சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக கூட்டு எதிர்கட்சியினர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய மாலபே, தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஆற்றல் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு இருந்தும் அதற்கு எவ்வித தீர்வும் காணவில்லை என அவர் மீது குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைச்சரே காரணம் என தெரிவித்துள்ள திஸ்ஸ விதாரண , அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
(rizmira)