மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று மாலை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்தக் குறித்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை, சிரேஷ்ட பத்திரிகையாளர் K.T.ராஜசிங்கம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
மன்னார் மறை மாவட்ட ஆயர், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்துக்கு ஆற்றி வரும் பணிகளை பாராட்டியதுடன் இந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீவிரம் காட்டி தீர்த்துவைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இன்னும், மன்னாரில் உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் வைத்தியசாலை குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுத்தார்.
ஆயருடனான சந்திப்பில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள், மன்னாரின் குறைபாடுகள் தொடர்பில் விடுத்த கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாத் உறுதியளித்தார்.
