அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை ஜனாதிபதி பதவி விலக்க வேண்டும் – சுமந்திரன்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை ஜனாதிபதி பதவி விலக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க பதவி விலகியமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி எங்களோடு நடத்திய பேச்சுவார்த்தையிலும் கூட, அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் விருப்பம் இல்லாதவர் போல பேராசிரியர் மானதுங்க காட்டிக்கொண்டார்.

எங்களுக்குள்ள பிரச்சினை, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு பற்றியது.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடக்கு கிழக்குக்கு பாரிய இராணுவப் பட்டாளங்களோடு சென்று வருகிறார்.

அவருடைய பணிப்புரையின் கீழ்தான் சட்டவிரோத காணி அபகரிப்புகள் இடம்பெற்று வருகிறன.

அதனால் ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்பது விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.