கடந்த கால பருவத்தின் போது அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லினால் 400 கோடி ரூபாய் நஷ்டம் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக விவசாய அமைச்சர் ஹரிஸன் மற்றும் சந்தைப்படுத்தலுக்கு பொறுப்பான சபைக்கு எதிராக ஊழலுக்கு எதிரான விசாரணை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குறித்த முறைப்பாட்டினை அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம், அரிசி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சிறுதொழில் அனைத்து இலங்கை ஒன்றியம் மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த முறைப்பாட்டினை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.