(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பாதீட்டு குழு நிலை விவாதத்தின் 17ம் நாள் இன்றாகும்.
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் , பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது.
வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற மாகாண சபைகள் ஆகிய இரண்டு அமைச்சுகளுக்குமான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு பிரேரணையை, பாராளுமன்றத்தில் இன்று(03) சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.