(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எழுந்த சர்ச்சையினை தொடர்ந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீளவும் தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ரவுப் ஹகீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும்,
பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹாரிஸ், அமீர் அலி மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் அப்துல் மகரூப் பிரதி அமைச்சராகவும் பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முஸ்லிம் அமைச்சர்கள் இன்று(26) அல்லது நாளை(27) அமைச்சுக்களை பொறுப்பேற்கவுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.