அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், அடுத்த வார​ம் பதவி ஏற்பர்

(FASTNEWS | COLOMBO) – அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், மீளவும் இந்த வாரம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.

அடுத்த வார​மே இவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்தவொரு அமைச்சரும் தொடர்பில்லாததால், அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதில் பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.