அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும், பாராளுமன்றத்தில் எதிர்கட்சி பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்குமாறு பாராளுமன்ற பொது செயலாளரிடம் எழுத்து மூலம் கோரப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கையெழுத்து இடப்பட்ட எழுத்து மூல ஆவனம் இன்று(20) கையளிக்கப்படும் என கூறப்பட்டிருந்த போதிலும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக அந்த செயற்பாடு விரைவில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களது தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்களான டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் லண்டனுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.