பண்டாரவளையில் அமைதியின்மையை ஏற்படுத்திய 19 பேர் விளக்கமறியலில்…

பண்டாரவளையில் இடம்பெற்ற இசைக்கச்சேரி நிகழ்வின் போது பொலிஸாருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்ட19 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நேற்று(24) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இசைக் கச்சேரி நிகழ்வின் போது மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மேடை மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், இசைக் கருவிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது