(FASTNEWS | COLOMBO)- அம்பலங்கொட, அகுரல கடலில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மற்றும் கஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.