மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ஶ்ரீரங்காவினால் நடாத்தப்படும் ‘‘மின்னல்’’ நிகழ்ச்சியின் போது; ரங்காவினது அப்பட்டமான அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டு ஊடகங்களில் வலம்வருகின்றது.
அதாவது, ஜூலை 4ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது இப்தார் நிகழ்ச்சிக்கான இடைவெளியில் ரங்கா, சக்திவேல் மூலம் திகாம்பரத்தை திட்டச் சொல்லும் விதமும் அதற்கு அவர் சக்திவேலுக்கு சொல்லிக் கொடுக்கும் காணொளிக் காட்சிகள் மற்றும் காணொலி அடங்கிய வீடியோ ஒன்று எமது சகோதர நண்பரொருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்வையிடின் ரங்காவின் கள்ள, மானங்கெட்ட அரசியல் நாடகத்தை உலக மக்கள் குறிப்பாக மலையக மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
கீழுள்ள வீடியோவை 30 வது செக்கனில் இருந்து பார்க்கவும் (watch this from 30 seconds. )
[youtube url=”https://www.youtube.com/watch?v=LcCfXlThaVI” width=”560″ height=”315″]
நேரடி நிகழ்ச்சி என்று சொல்லுகின்ற போதும் அங்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் ரங்காவின் கண்காணிப்பின் கீழேயே செல்லுபடியாகின்றது என்பது மட்டும் உறுதி..
ரங்காவே கேள்விகளை வழங்கி அவரே பதிலையும் வழங்குகிறார் என்றால், இம்மானங்கெட்ட பொலப்பிற்கு வெளியில் பிச்சை வாங்கலாமென மக்கள் சமூகமே காறித்துப்பும் என்பது மட்டும் தெளிவு.
இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்று நன்கு அறிந்து கொண்ட இந்த ரங்கா, அப்பாவி மலையகப் பெண்கள் சிலரை தூண்டிவிட்டு பிரஜைகள் முன்னணி சார்பில் அவர்களை தேர்தலில் நிறுத்தி தமிழ் பிரதிநிதிகளுக்குச் செல்லும் வாக்குகளை சிதைவடையச் செய்ய திட்டம் தீட்டியுள்ளது மாத்திரமல்லாது அவ்வாறு தான் செய்யும் அநியாயத்திற்கு பரிசாக மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் தேசியப் பட்டியலில் தனது பெயரை சேர்த்துக் கொண்டுள்ளார். ரங்காவின் அரசியல் பித்தலாட்டம் இப்போதாவது மக்களுக்குப் புரிந்தால் பெரிய விடயம் தான்…..
ஜூலை 4ம் திகதி நடைபெற்ற மின்னல் நிகழ்ச்சி —
[youtube url=”https://www.youtube.com/watch?v=K-PKuKeBNrY” width=”560″ height=”315″]