அம்பலாந்தோட்டை – புஹுல்யாய வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால் பாலமொன்று உடைந்தமையினால் குறித்த வீதியின் ஒருபகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று(12) முற்பகல் இவ்வாறு வீதி தாழிறங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக மாமடல – வலேவத்த தொடக்கம் புஹுல்யாய ஊடாக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அம்பலாந்தோட்டை பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.