அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் கொலை…

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இன்று(21) அதிகாலை 4.40 மணியளவில் ஆயுதம் ஒன்றால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரர் 21வயதுடைய, புலத்கொஹுபிடிய, கேகாலை பிரதேசத்தினைச் சேர்ந்த டப்ளியு.எம்.என்.எஸ்.ஜயசேன என்பவராவார்.

சந்தேக நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காததால் அவரது உடலை முதல்கட்ட விசாரணைகள் இடம்பெறும் வரையில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிசார் தெரிவிக்கின்றனர்.