இரண்டு மனித கொலைகள் உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ‘அம்ப சுஜீ’ எனப்படும் ஜூலம்பிட்டி சஜித் குமார பொலிசாரினால் தங்காலை – பட்டியபொல பகுதியில் வைத்து நேற்று(15) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், 5 கையடக்க தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.