அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறி 13 பேரை சேவையில் இணைத்துக்கொள்ள நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க அச்சக பணியாளர்கள் இன்று(06) நண்பகல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அதன் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அதுல தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது அச்சு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்