அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ரங்க கலன்சூரிய நியமனம்

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர், கலாநிதி ரங்க கலன்சூரிய நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊடகவியலாளராகவும், பின்னர் இலங்கை ஊடகக் கல்லூரியின் பணிப்பாளராகவும் கலன்சூரிய பணியாற்றினார்.

அதன்பின்னர் மலேசியாவில் இலங்கை தூதரக ராஜதந்திரியாகவும் செயற்பட்டார்.

இந்நிலையில் ஊடக அமைச்சுக்கு புதிய செயலாளராக நிமால் போப்பகே நியமிக்கப்பட்டதையடுத்து, பணிப்பாளராக கலன்சூரிய நியமிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.