கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்தவுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டங்களில், பெருமளவான அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரசார கூட்டம், சுவரொட்டிகள், பதாதைகள் அச்சிட்டமை மற்றும் தேர்தல் காலத்தில் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை என அரசாங்கத்தின் பில்லியன் கணக்கான நிதியை மஹிந்த அரசாங்கம் செலவிட்டுள்ளதாக குற்றங்சாட்டப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் உரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எதிர்வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் போட்டியிடும் நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அது மஹிந்தவின் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை, அவரது வாக்கு வங்கியிலும் சரிவை ஏற்படுத்தும்.
இதேவேளை, கடந்த பொதுநலவாய மாநாட்டின்போது காலை உணவிற்காக செலவிடப்பட்ட பணம் மற்றும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியினை தவறாக பயன்படுத்தியமை என பல குற்றச்சாட்டுக்கள் மஹிந்த தரப்பினர் மீது சுமத்தப்ட்டள்ள நிலையில், இவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(கே.அஸீம் முஹம்மத்)