அரசினால் கட்டுப்பாட்டு விலைக்கு வட்டக்காய் வாங்கும் திட்டம்…

கட்டுப்பாட்டு விலையில், வட்டக்காய்களை கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு கீழ் ஒரு விவசாயிடம் இருந்து முதல் கட்டமாக 1,500 கிலோ கிராம் வட்டக்காய்களை கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

விவசாய சேவை மையங்கள் ஊடாக குறித்த கொள்வனவுகள் இடம்பெறவுள்ளதோடு, இங்கு வட்டக்காய் கிலோ கிராம் ஒன்று 30.00 ரூபாவுக்கு வாங்கவுள்ளதாகவும் விவசாயத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாங்கப்படும் வட்டக்காய் அரச நிறுவனங்களால் மக்களுக்கு சாதாரண விலையில் விற்கத் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுப்பாட்டு விலையில் வட்டக்காய் கொள்வனவு செய்யும் திட்டமானது முதல் முறையாக நேற்று(20) நொச்சியாகம, விலச்சேன பிரதேசங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.