(FASTNEWS | COLOMBO) – ஆபத்தான கணினி மற்றும் கணினி வலையமைப்புக்களை அடையாளம் காண புதிய இணைய பாதுகாப்பு சட்டமூல வரைபை அரசாங்கம் தயாரித்துள்ள நிலையில் இது தொடர்பில் எதிர்வரும் ஜூன் 6ம் திகதி பொதுமக்களிற்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த சட்டமூலத்தின்படி, இணைய பாதுகாப்பு கட்டமைப்பொன்று நிறுவப்படும். நாட்டில் உள்ள ஆபத்தான கணினி மற்றும் கணினி வலையமைப்புக்களை அடையாளம் காணவும், கண்காணிக்கவும் சிஐஐ (Critical Information Infrastructure) என்ற கட்டமைப்பு நிறுவப்படஉள்ளது.
அத்துடன் பொதுசுகாதாரம், தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளிட்ட சில விவகாரங்களுடன் தொடர்புடைய கணினி வலையமைப்பிற்கு இடையூறு ஏற்படுத்தும் கணினிகள் மற்றும் வலையமைப்புக்கள் அடையாளம் காணப்பட்டு, கண்காணிப்பு வலையமைப்பில் வைக்கப்படும்.
மேலும் அரசு மற்றும் தனியார்துறைகளின் கணினி வலையமைப்புக்களை தேசிய இணையத்தள பாதுகாப்பு நடவடிக்கை மையம் கண்காணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.