அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் விசேட சந்திப்பு ஒன்று இன்று(22) அலறி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்நாள் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்ற வாரங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படும் என அரச தரப்பு கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் கயந்த கருணாதிலக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.