உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த 20 ஆவது சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மாகாண சபை வளாகத்தில் நேற்று(24) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“..அரசியலமைப்பு திருத்தமானது பாராளுமன்றத்துடன் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது. இக் கூட்டத் தொடரில் 20 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தேசிய அரசாங்கம், மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கையகப்படுத்தி வைக்கத் திட்டமிடுகின்றது…” என முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த இந்த அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் 20 ஆவது சட்டமூலம் தொடர்பான விவாதம் வட மாகாண சபையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என வட மாகாண முதலமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.