அரசியலமைப்பின் ’20’ குறித்து ஆராய கூட்டமைப்பு கூடுகிறது..

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய, விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் வகையிலான யோசனைகளை அடங்கிய 20ஆவது திருத்தச் சட்ட வரைபு, அண்மையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் ஆராய வேண்டும் என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)