அரசியலமைப்புச் சபையை நியமிப்பது தொடர்பிலான யோசனைக்கு ஶ்ரீ.சு.கட்சி பச்சைக்கொடி

அரசியலமைப்புச் சபையை நியமிப்பது தொடர்பிலான யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

குறித்த யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்க கட்சியின் மத்திய செயற்குழு ஒருமனதாக தீர்மானித்துள்ளதாக, இரஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது குறித்த யோசனையை அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த யோசனை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 9ம் திகதி இடம்பெறவுள்ளதோடு, இதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உருப்பினர்களும் ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று மாலை கூடிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.