அரசியலமைப்புச் சபை எதிர்வரும் வியாழனன்று கூடுகிறது..

அரசியலமைப்புச் சபை எதிர்வரும் வியாழக் கிழமை (21) காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பு செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் அறிக்கை மற்றும் மக்கள் கருத்துக்களை கேட்டறிவதற்கான லால் விஜயநாயக்கவின் அறிக்கை என்பனவற்றை உள்ளடக்கியதாக பிரதமரின் அறிக்கை அமையவுள்ளதாகவும் அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடைக்கால அறிக்கை பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதனையடுத்து இறுதி அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

(rizmira)