புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தும் குழு மற்றும் அதன் அறிக்கைகள் என்பன அரசியலமைப்புக்கு முரணானது எனவும், அதன் செயற்பாடுகளை ஆரம்பம் முதல் செல்லுபடியற்றது என அறிவிக்குமாறும் கோரி சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
குறித்த இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அடங்கலான சகல கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்களுக்கும் விஜயதாச ராஜபக்ஷவினால் நேற்று(13) அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.