அரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழுவை நியமிக்குமாறு பாராளுமன்றில் பிரேரணை…

அரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைக்க இருப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

19 ஆவது திருத்தத்தினூடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. உயர் பதவிகள், நீதிமன்றங்கள் என்பவற்றிற்கு நீதிபதிகளை நியமித்தல் என்பன அரசியலமைப்பு சபையினூடாகவே மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், குறித்த சபை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு சபை மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். அரசியலமைப்பு சபை தலைவராக சபாநாயகர் செயற்படுகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(iFA)