புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவானது நாளை(11) காலை 10.30 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், இதன் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, குறித்த விசேட குழுவினால் நாளை, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது.