அரசியலமைப்பு நகல் தயாரிக்கப்பட்டதும், மகாநாயக்கர்களிடம் ஆலோசிக்கப்படும்..

அரசியலமைப்பு நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்று(06) கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மகா நாயக்க தேரர்களை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக எந்தவித இறுதி வரைவுகளும் செய்யப்படவில்லை என்றும், அரசாங்கம் இதுபோன்ற வரைவு ஒன்றை செய்யுமாயின் நாட்டின் எதிர்காலம் மற்றும் ஸ்தீரத்தன்மை குறித்து ஆழமாக சிந்தித்தே செயற்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)