அரசியலமைப்பு பேரவைக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பிரதி நிதியொருவர் உள்வாங்கப்படவேண்டுமென 125 முஸ்லிம் சமூக அமைப்புகளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் பல அச்சுறுத்தல்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. என்றாலும் 2015 ஜனவரியில் ஆட்சி மாற்ற மேற்பட்டு 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் நீதியையும் ஜனநாயகத்தினையும் அனுபவிக்க முடியுமாகவுள்ளது.
அரசியலமைப்பு பேரவையில் முஸ்லிம் சமூக பிரதிநிதியின் பங்கு அவசிமாகவுள்ளது. எனவே இதுபற்றி கவனம் செலுத்தி முஸ்லிம் பிரதிநிதி யொருவரை நியமிக்கும்படி வேண்டுகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.