(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புக்களை நிறைவு செய்து பதவி விலக தயாராக உள்ளதாக அறியக் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று(02) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ரணில் விக்கிரமசிங்க மிகவும் கௌரவமான முறையில் புதிய தலைமுறைக்கு தமது பொறுப்புக்களை ஒப்படைத்து அவரின் ஜனநாயக கடமையை நிறைவு செய்வார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.