அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் – சஜித்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தனக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக குறித்த கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இன்று காலை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, சந்திரானி பண்டார ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தனக்கு எவ்வித பதவி மோகமும் இல்லை என்றும் தன்னை மக்களுக்கு தேவை இல்லை எனின், நாளைய தினம் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.