அரசியலில் கைவிடப்பட்ட அனாதைகளாக ராஜித மற்றும் மகன்

நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரது மகன் டாக்டர் சத்துர சேனாரத்னவும் தற்போது அரசியல் அநாதைகளாகியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய நபர்கள் கூறியுள்ளனர்.

ராஜித சேனாரத்ன தனது அரசியல் குறித்து பசில் ராஜபக்ஷவுடன் 7ம் திகதி அதிகாலை 3 மணிவரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சிலவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக வந்தால் தனது அரசியல் குறித்து பசிலுடன் நிதானமாக ராஜித்த பேசியுள்ளார்.

நடக்கும் எதற்கும் தலைபோடாது ஒதுங்கி ஓரமாய் இருக்குமாறு பசில், ராஜிதவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தான் அமெரிக்கா செல்ல உதவி செய்தமைக்கு நன்றிக் கடனை மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் செய்து காட்டுவதாக பசில் உறுதி அளித்துள்ளார்.

ராஜிதவின் மகன் சந்துரவிற்கு வேட்பு மனு அளிக்க வேண்டாம் என ரணில் பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தூய்மைக்கான நாளைய அமைப்பை ஐ.தே.கட்சியுடன் இணைப்பதாக சத்துர அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியமையே ரணில் இவ்வாறு பணிக்கக் காரணம் என கூறப்படுகிறது.

ராஜிதவின் மனைவி சுஜாதா மீண்டும் மஹிந்த மற்றும் ஷிராந்தியுடனான உறவை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐதேக தவிசாளர் மலிக் சமரவிக்ரம ஊடாக எப்படியாவது களுத்துறை மாவட்டத்தில் ஐதேகவில் போட்டியிட வேட்பு மனு பெற்றுக் கொள்ள முயற்சிக்குமாறு சுஜாதாவிற்கு ராஜித ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(riz)