அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக ஆணைக் குழுவின் சிரேஷ்ட ஆலோசகரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அரசியலில் செயற்பாடுகளில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைவாகக் காணப்படுவதாக அவர்  இங்கு குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர், பொறுப்பான அமைச்சுக்கள், தேர்தல்கள் செயலகம், நிறுவனங்கள் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

One thought on “அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

  1. நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுகிண்றது

Comments are closed.