அமைச்சுப் பதவியில் கஷ்டப்பட்டு உழைக்கத் தேவையில்லை, ஊடகங்களில் அடிக்கடி முகம் காட்டினால் பொதுமக்களை ஏமாற்றிவிடலாம் என்று முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சரே தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தேர்தல் காலத்தில் எங்கள் பதவிகளை பாதுகாத்துக் கொள்ள நாங்கள் கடுமையாக கஷ்டப்பட வேண்டியிருந்தது. பிரச்சார காலத்தில் ஒழுங்கான தூக்கம் கூட கிடைக்கவில்லை.
வேலையொன்றுக்காக நேர்முகத்தேர்வுக்குச் செல்பவர்கள் கூட ஓரிரண்டு அதிகாரிகளை சமாளித்துவிட்டால் வேலை கிடைத்துவிடும். ஆனால் அரசியலில் வெற்றிபெற இலட்சக்கணக்கான மக்களை ஏமாற்றினால் தான் முடியும்.
அதேபோன்று தேர்தல் காலத்தில் பல்வேறு வழிகள் ஊடாக நான் வெற்றி பெற்றுவிட்டேன். இனி நான் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக அடிக்கடி ஊடகங்களில் அடிக்கடி முகம் காட்டும் வகையில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானது.
நாங்கள் பொதுமக்களுக்காக கஷ்டப்பட்டு உழைப்பதாக அவர்கள் நம்பிவிடுவார்கள். என்றும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சர் அண்மையில் மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்துவது தொடர்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் பொது வைபவங்களில் தூங்கி வழிவதில் படிகெட்டிக்காரர் என்றும் பெயரெடுத்துள்ளார் என்றால் பாருங்களேன்..