இன்று உள்ள அரசியல் கட்சிகள் நாட்டில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிர்ப்பினையே தெரிவித்து வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதனூடாக வைராக்கியங்களை வளர்த்துக் கொண்டு தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவ்வாறான சந்தர்ப்பங்களின் போதும் அபிவிருத்தி திட்டங்களைமுன்னெடுப்பது சவாலான விடயம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேல்மாகாண நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடுவெல மாநகரசபை ஊடாக அபிவிருத்திசெய்யப்பட்ட வெலிவிட்ட வீதி மற்றும் சுஹந்த மாவத்தை ஆகியவற்றை பொதுமக்களிடம்கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.