சட்ட மா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இன்றையதினம் ஒன்று கூடவுள்ளது.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் தாம் எடுத்துரைக்கவிருப்பதாக, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் நேற்றையதினம் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.