அரசியல் கைதிகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை…

அனுராதபுர சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகள் குறித்து இன்று(19) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற அமர்வில் வைத்து குறித்த சந்திப்பு தொடர்பில், சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தகவல் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், நீதி அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.