அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்த தடை…

அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகளிடமும், சுயாதீன குழுக்களிடமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மரினி தி லிவேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டால் அது சிறுவர் துஷ்பிரயோகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பாக, 1929 என்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மக்களிடம் ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.