அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வுக் காண சமரசம் செய்யுமாறு ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டைக்கு அமைதியான முறையில் தீர்வு காண கட்சித் தலைவர்கள் சமரச மனப்பான்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மோதலின் அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.