நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று(19) மாலை 4 மணிமுதல் 7 மணிவரையில் விவாதிப்பதற்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு, நேரம் ஒதுக்கித்தருமாறு கோரியிருந்ததை அடுத்து, இந்த விவாதம் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.