பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து, அரசிலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரில், 03 பேர் நல்லாட்சி அரசாங்கத்துடன் மீளவும், இணைவதற்கு இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவரே, இவ்வாறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்களெனத் தகவல் தெரிவிக்கின்றது.
அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்படவுள்ளதாகக் தெரிவிக்கப்படும், புதிய அமைச்சரவையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே, குறித்த மூவரும் காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.