அரசிலிருந்து வெளியேற முன்னணி குழுவொன்று நியமிப்பு…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் இருந்து விலகுவதற்காக தீர்மானம் ஒன்றினை எட்டுவதற்கு தேவையான அறிக்கையினை 14 நாட்களில் தயாரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவினால் நேற்று(04) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எஸ்.பி.திசாநாயக்க, தினேஷ் குணவர்தன, ஐ.ம.சு.முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளரான பேராசிரியர். ரோஹன லக்ஷமன் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் குறித்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பொருளாதாரத்தினை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் தற்போதைய அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து மக்கள் எதிர்ப்புகளை ஆதரித்து அரசினுள் தொடர்ந்தும் இருக்க முடியாது என நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.