(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று(26) சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அங்கு ரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றினை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, குறித்த சம்பவம் தொடர்பில் அவரது அதிருப்தியினையும் வெளியிட்டுள்ளார்.
Unfortunate incident at Sooriyawewa cricket stadium ticket counters. Assaulting spectators and the public is absolutely unacceptable. The Government must conduct an immediate inquiry and take action. @OfficialSLC
— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 27, 2020