அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

தற்போதைய அரசின் அமைச்சர்கள் நியமனம் சட்ட விரோதமானது என தெரிவிக்குமாறு கோரிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல என்று உத்தரவிடுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்படி தேசிய அரசாங்கமாக கருதப்படுவது, பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக் கொண்ட கட்சியுடன் ஏனைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அமைக்கும் அரசாங்கத்தையேயாகும்.

எனினும் தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல என்பதுடன் அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டதாகவே இருக்க வேண்டும் என்று மனுதார் மேலும் கூறியுள்ளார்.