அரசுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று..

நல்லாட்சி அரசுக்கு எதிராக இன்று(18) மாலை கொழும்பு நகரில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று ஏற்பாடு செய்துள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு இப்பன்வில சந்தியிலிருந்து பல்வேறு பாதை வழியாக வரும் பெரும் தொகையான மக்கள் குறித்த இந்த அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதி நிகழ்வு லிப்டன் சுற்று வட்டத்தில் மாலை 4.00 மணிக்கு “அபசகுணமான இரு வருடங்கள்” எனும் தலைப்பில் இடம்பெறவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

 

(rizmira)