அரசாங்கத்தினை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்ட சில அமைச்சுக்களின் செயலாளர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சார அமைச்சுக்களின் செயலாளர்களே இவ்வாறு நீக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் நிறைவடைந்ததன் பின்னர் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஆளும் தரப்பு சிரேஷ்ட அமைச்சர்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.